லக சாயி சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் வணக் கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, நாம் யாராலும் கைவிடப்பட்டாலும் யாருமே இல்லையென்று கலங்கவேண்டிய அவசிய மில்லை. எல்லா உறவாகவும், எல்லா பலமாகவும் நமது சாய்பாபாவே திகழ்வார் என்கின்ற நம்பிக்கையோடு நடைபோட்டோமேயானால், நமக்கு இதமான எதிர்காலமே அமையும்.

Advertisment

பிள்ளைகள் மதிக்கவில்லை என்றாலும், வாழ்க்கைத்துணை அன்புசெலுத்தவில்லை என்றாலும், இக்கட்டான சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டாலும் சாய் அப்பாவை வணங்கிய நாம் சாகவே மாட்டோம் என்பது திண்ணம்.

பிரார்த்தனையை அவரிடத்தில் இப்படிச் செய்யவேண்டும் என்பதை அறிந்து செய்தோமேயானால் கண்டிப் பாக வெற்றிபெறுவோம். உங்களை யாராவது தூக்கியெறிகிறார்கள் என்றால் பாபா உங்களை மேலே தூக்கிவிடுகிறார் என்று பொருள். நீங்கள் இழந்தவற்றையெல்லாம் பெறப் போகிறீர்கள் என்பது நிச்சயம். எல்லா கட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்போகிறார் என்பது திண்ணம். அதனால்தான் சாய்பாபா சொல்கிறார்: "உன் சுமைகளை என்னிடம் ஒப்படைத்துவிடு. நான் உன் சுமைகளை ஏற்றுக்கொண்டு, உன்னை நல்லவிதமாக வாழவைக்கிறேன்' என்று! எனவே நாம் சாய்பாபாவை நம்புவோம். கூட்டுப் பிரார்த்தனையில் கூடுவோம். குறைவில்லாமல் வாழ்வோம்.

குறிப்பு: இந்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ் என்கிற மொபைல் அப்ளிகேஷனையும், வர்ன் பன்க்ஷங் ஈட்ஹய்ய்ங்ப்-ஐயும் பயன்படுத்தலாம். 86087 00700, 86086 00400 என்னும் அலைபேசி எண்களிலும் அணுகலாம். வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரம், 480/4, ஜி.எஸ்.டி. ரோடு, (இரணியம்மன் கோவில் அருகில்), வண்டலூர், சென்னை- 600 048, தமிழ்நாடு, இந்தியா என்னும் முகவரிக்கு நேரிலும் வரலாம்.

Advertisment

பாபாவின் அற்புதங்களை அனுபவித்த வர்கள், அந்த விவரங்களை மேற்கண்ட முகவரியில் பகிர்ந்துகொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படுபவை இந்தத் தொடரில் இடம்பெறும்.

இனி, நமது சாயி சொந்தங்களின் அற்புத அனுபவங்களைப் பார்ப்போம்.

சிறைக்கதவைத் திறந்த பாபா!

என் பெயர் விஸ்வநாதன். நான் வில்லிவாக்கத்தில் வசிக்கிறேன். சுவாமிநாதன் என்ற எனது ஒரே மகன் "ஆன்லைன் டிரேடிங்' வியாபாரத்தை பெரிய அளவில் லாபகரமாக செய்துவந்தான். திருமணமாகாத முப்பது வயதான அவனுக்கு நல்ல பெண்ணாகப் பார்க்க முயன்றுகொண்டிருந்தோம். திருமணம் கூடிவரும் நிலையில் திடீரென்று அவனுடைய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு, கடனாளியாகிவிட்டான். கடன் கொடுத்தவர்கள் அவனை அவமானப் படுத்தி சிறையிலடைத்துவிட்டார்கள். வயதான பெற்றோரான நாங்களிருவரும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றோம். அப்பொழுதுதான் இஹக்ஷஹ டழ்ஹஹ்ங்ழ் என்கிற யூ டியூப் சேனல்-ஐப் பார்க்க நேர்ந்தது. அதில் சாய்ராம்ஜி கூட்டுப் பிரார்த்தனைகளை செவ்வனே நம்பிக்கை யுடன் செய்துகொண்டிருந்தார். அதைப் பார்த்தவுடன் என் உள்ளத்திலும் நம்பிக்கை ஏற்பட்டது. உடனே அவரை கைப்பேசி யில் தொடர்புகொண்டு பிரார்த்தனை செய்துகொண்டேன். அப்பொழுது, என்னுடைய மகனை புழல் சிறையிலிருந்து என்றைக்கு விடுவிக்கிறார்களோ அந்த தினம், அந்த நேரம் வேறெங்கும் செல்லாமல் வண்டலூர் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து, அவரை வழிபட்டுவிட்டு, பிறகுதான் வேறு வேலைகளைப் பார்ப்பதாக மனதில் சங்கல்பம் செய்துகொண்டோம்.

வழித்துணை பாபா விழிதிறந்து, புழல் சிறைக் கதவுகளை என் மகனுக்காகத் திறக்கச் செய்து வழிகொடுத்தார். நாங்கள் வேண்டிக்கொண்டபடி, நேராக வழித்துணை பாபாவின் கோபுரத்திற்கு என் மகனை அழைத்துச்சென்று பாபாவை தரிசித்தோம். அன்றைய தினம் வியாழக்கிழமை. நண்பகல் ஆரத்தியையும், கூட்டுப் பிரார்த்தனையையும் சாய்ராம்ஜி அவர்கள் மிகப்பெரிய சாயி பக்தர்களின் குழுவினரோடு செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நாங்கள் வந்த செய்தியை அறிந்த சாய்ராம்ஜி, எங்கள் பெயரைத் தெரிவிக்காமல், அடையாளம் காட்டாமல், விஷயத்தை மட்டும் பக்தர்களிடம் சொல்லி, பாபாவின் அற்புதங்களை மகிமைப்படுத்தினார்.

Advertisment

பாபாவை நம்பினோர் பாவமே செய்திருந் தாலும் கைவிடப்படமாட்டார் என்பது திண்ணம்.

baba

பாவ விமோசனம்!

என் பெயர் சுவாதி. வயது பதின்மூன்று. ஒன்பதாவது வகுப்பு படிக்கிறேன். எங்கள் வீட்டில் நான், எனது சகோதரி சுவேதா மற்றும் எனது தாய் ஆகிய மூவரே இருக்கிறோம். தந்தையை இழந்த எங்களை எனது தாய் சரஸ்வதி இரவு- பகலாக வேலை செய்து, எங்களை படிக்க வைப்பதற்கும், வீட்டு வாடகை தருவதற்கும், சாப்பாட்டு செலவிற்கும் தவித்து வருகிறார்.

கல்விக் கட்டணத்தை செலுத்துவதற்கும், நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதற்கும்கூட கஷ்டப்பட்டு வருகிறோம். இருந்தாலும் நம்பிக்கையைத் தவறவிடாமல், இந்த நிலையிலும் எங்களுக்கு நம்பிக்கைதந்து வாழ வைத்து வரும் வழித்துணை பாபா கோவிலுக்குச் சென்று சேவைகளைச் செய்துவருகிறோம்.

அண்மையில் பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்குப் புறப் பட்டோம். ஒவ்வொரு முறை செல்லும்போதும் பத்து ரூபாய்க்கு பிஸ்கட்டும், அன்னதானத்திற்கு அரிசியையும் வாங்கிச்செல்வது வழக்கம்.

ஆனால் அன்றைய தினம் எங்களிடம் பத்து ரூபாய்கூட இல்லை. எனவே, நடந்தே நாங்கள் கோவிலுக்குச் சென்று கொண்டிருந் தோம். எனது காலில் ஏதோ ஒரு தாளை மிதித்ததுபோல் தோன்றி யது. திரும்பிப் பார்த்தால் ஐம்பது ரூபாய் நோட்டு! அதை எடுத்து வந்து நாங்கள் நினைத்தபடி பிஸ்கட் பாக்கெட்டையும், கொஞ்சம் அரிசியையும் வாங்கிக்கொடுத்துவிட்டு, பாபாவை நிறைவுடன் தரிசித் தோம். இதிலிருந்து பாபாவின் மீதிருந்த நம்பிக்கை மேலும் கூடியது. நிச்சயம் அவர் எங்களை நன்றாக வாழவைப்பார். பாபா தரிசனம்- பாவ விமோசனம்; வியாழன் தரிசனம்- விடியல் நிதர்சனம்.

மானம் காத்த பாபா!

எனது பெயர் மல்லிகா. நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். அங்கே நான் குடியிருந்தபோது எனது ஒரே மகனை நான் அன்போடு வளர்த்துவந்தேன். என் கணவர் காலமாகிவிட்டதால், படிப்பறிவில் லாத என்னால் எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. நான் பார்ப்பதற்கு அந்தஸ்துடையவள்போல் இருப்பதால் வீட்டுவேலைக்கோ, சமையல் வேலைக்கோ என்னைப் பணியிலமர்த்த யாரும் முன்வரவில்லை. பணமில்லாத காரணத் தால் எங்களது எதிர்காலமே கேள்விக் குறியானது. கடன்காரர்கள் என்னை கேவலப்படுத்தினார்கள். பிறகு எனது மகனை பக்கத்து ஊரிலுள்ள சகோதரி வீட்டில்விட்டுப் படிக்க ஏற்பாடு செய்துவிட்டு, வேலைதேடி சென்னைக்கு வந்தேன். சென்னையில் கையில் பணமில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல், சாப்பிடுவதற்கு வழியில்லாமல் தாம்பரத்திலுள்ள ஒரு கோவில் தாழ்வாரத் தில் இரவு படுத்துத் தூங்கச் சென்றேன். அங்கு சந்நியாசிகளும், பரதேசிகளும் இருப்பதைக் கண்டேன். இருந்தாலும் வேறு புகலிடம் இல்லாததால் அங்கேயே அமர்ந்து தூங்கிவிட்டேன். நள்ளிரவில் என்னை ஒருவன் மானபங்கப்படுத்த முயற்சி செய்தான். நான் அலறித் துடித்து உரக்கக் கத்தினேன். என்னைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. நான் சென்னைக்கு வண்டலூர்வழியாக வந்தபோது, வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தை பேருந்திலிருந்தே தரிசித்துவிட்டு வந்தேன்.

அந்த பாபாவின் ஞாபகம் உடனே வர, "வழித்துணை பாபா! வந்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று கூவியழைத்தேன். உடனே சுற்றுவட்டாரத்தில் ஆட்களே இல்லாதிருந்த அந்த நடுநிசியிலும், எதிர்பாராமல் ஏழெட்டு ஆட்கள் ஓடிவந்து, என்னை மானபங்கப்படுத்த முயன்ற அந்த நபரை நையப்புடைத்தார்கள். விடிந்தபிறகு, என்னைக் காப்பாற்றிய அந்த வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்திற்கு வந்து பாபாவிற்கு நன்றிசொல்லி வழிபட்டேன். பிறகு அங்கிருந்த சாய்ராம்ஜி அவர்கள் என்னை காலை உணவு, மதிய உணவு சாப்பிடச் சொல்லி உபசரித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை இந்த வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் தங்கி, பாபாவுக்கு சேவை களைச் செய்துவருகிறேன். நடுநிசியில் கையறு நிலையில் கைம்பெண்ணாக இருந்த என்னைக் காப்பாற்றிய வழித் துணை பாபாவிற்கு கோடான கோடி நன்றிகள். உளமார நம்பியவர்களை பாபா எப்போதுமே கைவிடமாட்டார்.

விதியையே மாற்றும் உதி!

என் பெயர் பி. பெருமாள். சென்னை கே.கே. நகரில் வசிக்கிறேன். என் சொந்த ஊர் தேசூர் அருகிலுள்ள தென்னத்தூர் கிராமம். நான் 22-12-2019 அன்று வண்டலூர் ஆலயத்திற்கு வந்து சாய்பாபாவை தரிசனம் செய்துவிட்டு ஊருக்குப் புறப்படும்போது, சாய்பாபா, "நானும் உன்னுடன் வருகிறேன்' என்று சொன்னதுபோலுணர்ந்தேன். ஆலயத்திலிருந்து என் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டேன். செங்கல்பட்டு மலையடிவாரத்தில் வரும்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கைப்பேசியைப் பார்த்துக்கொண்டேவந்து என் வண்டிமீது மோதிவிட்டனர். நான் நிலைகுலைந்து நடுரோட்டில் விழுந்தேன். பக்கத்திலிருந்தவர்கள் என்னைத் தூக்கி நிறுத்தினர்.

என்னால் நிற்கமுடியவில்லை. என்மீது மோதியவருக்கு எதுவும் ஆகவில்லை. எனது இடதுகால்மீது வந்தவரது வண்டியின் முன்சக்கரம் மோதியதில் நிற்கமுடியாமல் போனது. மோதியவர் வருத்தப்பட்டு 200 ரூபாய் கொடுத்தார். அதற்கு "மூவ் ஸ்பிரே' வாங்கி அடித்துக்கொண்டு வலியோடு ஊருக்கு வந்தேன். கால் வீங்கிவிட்டது. அனைவரும் "எக்ஸ்ரே' எடுத்துப் பார்க்கச் சொன்னார் கள். சிறிது எலும்பு முறிவு இருந்தது. அப்பா "என்னுடன் வருகிறேன்' என்று சொன்னது போல் தோன்றியதன் பொருளை அப்போது புரிந்துகொண்டேன்.

அப்பாவால் சிறிய விபத்தோடு உயிர்தப்பினேன். இல்லையென்றால் என் வாழ்க்கையே முடிந்திருக்கலாம்.

நான் அப்பாவிடம், "மருத்துவமனைக் குப் போகமாட்டேன். உன் உதியை மட்டும் தண்ணீரில் கலந்து குடிப்பேன். இதிலேயே என் எலும்பு முறிவு சரியாகிவிடவேண்டும்' என்று வேண்டிக்கொண்டேன். ஒரே வாரத்தில் எலும்பு முறிவை உதியால் சரிசெய்துகொடுத்தார் சாய்பாபா. இது அப்பாவால் மட்டுமே சாத்தியம். அப்பாவின் உதியானது உடல் ஊனங்களையும், நோய்களையும், ஏன்- விதியையே மாற்றும்!

(தொடரும்)